முத்துப்பேட்டை வாலிபர் கைது

கோர்ட்டில் ஆஜராகாமல் வெளிநாட்டிற்கு தப்பி சென்ற முத்துப்பேட்டை வாலிபர் திருச்சி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-04-24 16:49 GMT
முத்துப்பேட்டை:
கோர்ட்டில் ஆஜராகாமல் வெளிநாட்டிற்கு தப்பி சென்ற முத்துப்பேட்டை வாலிபர் திருச்சி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். 
வெளிநாட்டிற்கு தப்பினார்
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஆசாத்நகரை சேர்ந்தவர் பக்கிரி முகமது. இவரது மகன் முகமது யூசுப் (வயது37). இவர் கடந்த 2005-ம் ஆண்டு  ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த இவர் கோர்ட்டில் ஆஜராகாமல் கத்தார் நாட்டிற்கு தப்பி சென்றுவிட்டார்.
முகமது யூசுப்பை பிடிக்க திருத்துறைப்பூண்டி கோர்ட்டு வாரண்டு பிறப்பித்திருந்தது. திருவாரூர் போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவின்படி முத்துப்பேட்டை போலீசார், முகமது யூசுப் பாஸ்போர்ட் விவரங்களை சேகரித்து சர்வதேச விமான நிலைய எமிக்கிரேஷன் பிரிவிற்கு அனுப்பினர். 
திருச்சி விமான நிலையத்தில் கைது 
இந்தநிலையில் நேற்று கத்தாரிலிருந்து விமானம் மூலம் முகமது யூசுப் திருச்சி விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது அங்கிருந்த விமான நிலைய எமிக்கிரேஷன் போலீசார் அவரை கைது செய்து முத்துப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் முத்துப்பேட்டை போலீசார் அவரை கைது செய்து திருத்துறைப்பூண்டி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்ட முத்துப்பேட்டை போலீசாரை திருவாரூர் போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் பாராட்டினார்.

மேலும் செய்திகள்