சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபருக்கு வலைவீச்சு

திண்டிவனம் அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2022-04-24 16:49 GMT
விழுப்புரம், 
 
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள ரெட்டணை குளக்கரை தெருவை சேர்ந்தவர் பிரவீன் (வயது 18). இவர் அப்பகுதியில் உள்ள செங்கல் சூளையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். அப்போது அவருக்கும், அதே செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்த சித்தேணி பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது. அப்போது ஆசை வார்த்தை கூறியும், கட்டாயப்படுத்தியும் சிறுமியை பிரவீன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் அந்த சிறுமி 7 மாதம் கர்ப்பமடைந்துள்ளார். இதுபற்றி அறிந்த சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இதுபற்றி அவர்கள் விழுப்புரம் அனைத்து மகளிர் போலீசில் புகாா் கொடுத்தனர். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் பிரவீன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்