தர்மபுரி அருகே தண்டவாளத்தில் ஆண் பிணம்

தர்மபுரி அருகே தண்டவாளத்தில் ஆண் பிணம் கிடந்தது.

Update: 2022-04-24 16:42 GMT
தர்மபுரி:
தர்மபுரி அருகே சிவாடி-தொப்பூர் இடையே உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் நேற்று காலை 40 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடந்தது. இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் தர்மபுரி ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ரெயில்வே போலீசார் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பிணமாக கிடந்தவர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்