குன்னம் ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
குன்னம் ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்
கொள்ளிடம்
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே குன்னம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக இரவு நேரங்களில் ஆரம்ப சுகாதார நிலையம் பூட்டியே கிடக்கிறது. இதனால் கிராம மக்கள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே அந்த பகுதியில் உள்ள 20 கிராம மக்களின் நலன் கருதி இரவு நேரங்களில் குன்னம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர் மற்றும் செவிலியர்களை உடனடியாக நியமிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், இரவு நேரங்களில் ஆரம்ப சுகாதார நிலையத்தை இயங்கக்கோரியும் விவசாயிகள் சங்க தலைவர் நரசிம்மன் தலைமையில் நேற்று கிராமமக்கள் ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.