கூடலூரில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கூடலூரில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
கூடலூர்:
கூடலூர் பழைய பஸ் நிலையம் அருகில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கூடலூர் எஸ்.டி.பி.ஐ. கட்சி நகர தலைவர் அஜ்மீர்கான் தலைமை தாங்கினார். நகர துணைத்தலைவர் கான் அப்துல் கபார்கான் வரவேற்றார். மாவட்ட தலைவர் அபுபக்கர் சித்திக், மாவட்ட பொதுச்செயலாளர் சாதிக் அலி, தொழிற்சங்க மாவட்ட தலைவர் அப்துல் வாஜித், பொருளாளர் அக்கீம் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசை கண்டித்தும், சொத்து வரியை 150 சதவீதம் உயர்த்திய மாநில அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. முடிவில் கூடலூர் நகர செயலாளர் காதர்மைதீன் நன்றி கூறினார்.