ரெங்கநாத பெருமாள் கோவில் தேரோட்டம்
கீழையூர் ரெங்கநாத பெருமாள் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
வேளாங்கண்ணி:
கீழையூர் ரெங்கநாத பெருமாள் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தேரோட்டம்
நாகை மாவட்டம் கீழையூரில் ெரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது. பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த கோவிலில் சித்திரை பிரம்மோற்சவம் கடந்த 16-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழா நாட்களில் தினமும் ஹம்ச வாகனம், பின்னைக்கிளை வாகனம், கருடசேவை, அனுமந்த வாகனம், யானை வாகனம், குதிரை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலா நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் தேரில் எழுந்தருளினார். இதை தொடர்ந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தோ் முக்கிய வீதிகள் வழியாக சென்று கோவிலை அடைந்தது.
மகா காளியம்மன் கோவில்
நாகை வெளிப்பாளையம் மகா காளியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 13-ந்தேதி தொடங்கியது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. முன்னதாக மகாகாளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார்.
இதையடுத்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகளின் வழியாக சென்று மீண்டும் கோவிலை அடைந்தது.
தாமோதர நாராயண பெருமாள் கோவில்
கீழ்வேளூர் தாலுகா திருக்கண்ணங்குடியில் தாமோதர நாராயண பெருமாள் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். ்நிகழ்ச்சியில் கோவில் செயல் அலுவலர் ஜெயராமன், கோவில் பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.