பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது

முள்ளக்காடு பகுதியில் பணம் வைத்து சூதாடிய 3 பேரை போலீசார் கைதுசெய்தனர்.

Update: 2022-04-24 15:34 GMT
ஸ்பிக்நகர்:
தூத்துக்குடி முத்தையாபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துமாலை மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது முள்ளக்காடு முனியசாமி நகர் அருகே சிலர் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருப்பதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து அந்தப் பகுதிக்கு சென்ற போலீசார் அங்கு பணம் வைத்து சூதாடிய முருகன் (வயது 55), மாடசாமி மற்றும் வைரமணி ஆகிய 3 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.3,320-ஐ பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்