செல்லமுத்து மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா
தேவூர் செல்லமுத்து மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா நடந்தது.
சிக்கல்:
கீழ்வேளூர் அருகே தேவூர் செல்லமுத்து மாரியம்மன் கோவிலில் சித்திரை பெருவிழா கடந்த 17-ந் தேதி பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பால்குட விழா நேற்று நடந்தது. முன்னதாக பிடாரி அம்மன் கோவில், திருவாசல் குளம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் காவடி மற்றும் பால்குடம் எடுத்து ஊர்வலமாக முக்கிய வீதிகளின் வழியாக சென்று கோவிலை அடைந்தனர். பின்னர் அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இன்று (திங்கட்கிழமை) மாலை தீமிதி திருவிழாவும், நாளை(செவ்வாய்க்கிழமை) செடில் உற்சவமும் நடக்கிறது.இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், கிராம மக்கள் செய்து இருந்தனர்.