புதிதாக 3 பேருக்கு கொரோனா
புதுச்சேரியில் புதிதாக 3 பேருக்கு கொரேனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் புதிதாக 3 பேருக்கு கொரேனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனா அதிகாரிப்பு
புதுவையில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு என்பது முற்றிலும் இல்லாமல் இருந்து வந்தது. இந்த சூழ்நிலையில் பல்வேறு மாநிலங்களில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. புதுவையிலும் பொது இடங்களில் முகக்கவசம் அணியவும், தடுப்பூசிகளை போட்டுக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
3 பேருக்கு பாதிப்பு
கொரோனா பாதிப்பு முற்றிலும் இல்லாமல் இருந்து வந்த புதுச்சேரியில் இன்று 3 பேருக்கு புதிதாக பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதாவது நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 318 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது.
அதில் புதுச்சேரியை பகுதியை சேர்ந்த 3 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்று முதல் தவணை தடுப்பூசியை 377 பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 2 ஆயிரத்து 274 பேரும், பூஸ்டர் தடுப்பூசியை 259 பேரும் செலுத்திக்கொண்டனர். இதுவரை 16 லட்சத்து 75 ஆயிரத்து 166 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.