அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தூத்துக்குடி புனித லூர்து அன்னை ஆலயத்தில்சிறப்பு திருப்பலி
அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தூத்துக்குடி புனித லூர்து அன்னை ஆலயத்தில்சிறப்பு திருப்பலி நடந்தது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி லூர்தம்மாள்புரம் புனித லூர்து அன்னை ஆலயத்தில் அரசு பொதுத் தேர்வு எழுதும் 10,11,12-ம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கான சிறப்பு திருப்பலி நடந்தது. லூசியா மனநலம் குன்றியோர் இல்ல அதிபர் ஜான் செல்வம், பங்குத்தந்தை ஆன்டனி ப்ரூனோ ஆகியோர் இணைந்து சிறப்புத் திருப்பலி நடத்தினர். இந்த திருப்பலியில் நல்ல மதிப்பெண் பெற்று மாணவர்கள் சாதனை படைத்திடும் வகையில், அவர்களுக்காக உருக்கமாக வேண்டிக்கொண்டு திருப்பலி நடத்திக் கொடுத்தனர். பின்னர் மாணவ -மாணவிகளுக்கு பேனா, பென்சில், ரப்பர், ஸ்கேல் ஆகிய பொருட்களை வழங்கினர்.
நிகழ்ச்சியில் 10-ம் வகுப்பு மாணவர்கள் 43 பேரும், 11-ம் வகுப்பு மாணவர்கள் 43 பேரும், 12-ம் வகுப்பு மாணவர்கள் 64 பேரும் ஆக மொத்தம் 150 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.