கோத்தகிரி அருகே பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம்
கோத்தகிரி அருகே பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம்
கோத்தகிரி
கோத்தகிரி அருகே குண்டாடா ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தலைவர், உறுப்பினர்கள் தேர்வு மற்றும் பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நடுஹட்டி ஊராட்சி தலைவர் அரக்கம்பை கிருஷ்ணன் தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் மணிகண்டன் மற்றும் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி மேலாண்மை குழுவின் மாவட்ட கருத்தாளர் நஞ்சுண்டன் பேசுகையில் பெற்றோர், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஆசிரியர்கள், சமுதாய பங்கேற்புடன் அமைக்கப்படும் இந்த அமைப்பு மாணவர் சேர்க்கை, இடைநிற்றல் நீக்குதல், நிதி ஆதாரம், பள்ளி மேம்பாட்டு திட்டம் உள்ளிட்ட பள்ளியின் முழு வளர்ச்சிக்கு உதவக்கூடிய உயிரோட்டமான அமைப்பாக இருக்கும் என்றார். கூட்டத்தில் பள்ளியின் புதிய மேலாண்மைக் குழு தலைவியாக யாஜி அம்மு, துணைத் தலைவயாக சரோஜா, உள்ளாட்சி பிரதிநிதிகளாக கிருஷ்ணன், ஆசிரியர் பிரதிநிதி மல்லிகா குமார், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர் திருச்செல்வி, கல்வியாளர் சுமித்ரா மற்றும் பெற்றோர்கள் 14 பேரும் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் சாம் சாந்தகுமார், கூட்ட நிகழ்வுகளைக் கண்காணித்து ஆலோசனைகள் வழங்கினார். மேலும் தேர்வு பெற்ற பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் 20 பேர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி, உறுதி மொழி ஏற்கப்பட்டது.