மாணவிக்கு பாலியல் வன்கொடுமை; வாலிபர் கைது
போளூர் அருகே பிளஸ்-1 மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
போளூர்
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த மாணவி அங்குள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.
அந்த மாணவிக்கு அதே கிராமத்தை சேர்ந்த கெல்வின் என்ற ஜோ.எபிநேசர் (வயது 22) என்பவர் பாலியல் வன்கொடுமை செய்து வந்தார்.
இதுபற்றி கிராமத்தினர் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தனர். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு பிரிவை சேர்ந்த பரமேஸ்வரன் சம்பந்தப்பட்ட கிராமத்துக்கு வந்து விசாரணை நடத்தினார்.
இதையடுத்து அவர், வாலிபர் மீது போளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா, சப்-இன்ஸ்பெக்டர் மீனாட்சி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஜோ.எபிநேசரை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பள்ளி மாணவியை திருவண்ணாமலையில் உள்ள காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர்.