பஸ்-மோட்டார் சைக்கிள் மோதலில் வாலிபர் பலி
பஸ்-மோட்டார் சைக்கிள் மோதலில் வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
காஞ்சீபுரத்தை சேர்ந்தவர் சதீஷ் (வயது 36). இவர் காஞ்சீபுரத்தில் இருந்து மோட்டார் சைக்கிள் மூலம் திருக்கழுக்குன்றத்தில் வசிக்கும் தனது தாயாரை பார்க்க வந்தார். அங்கு தாயாரிடம் நலம் விசாரித்து விட்டு அதே மோட்டார் சைக்கிளில் தனது வீட்டுக்கு திரும்பியுள்ளார். செங்கல்பட்டு அடுத்த புள்ளேரிமேடு என்ற இடத்தின் அருகே செல்லும்போது எதிரே வந்த மினி பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சதீஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.