திருவள்ளூர் அருகே அடையாளம் தெரியாத பெண் பிணம்
திருவள்ளூரை அடுத்த மேல் நல்லாத்தூர் கிராமம் பட்டரை பகுதியில் அடையாளம் தெரியாத பெண் பிணமாக கிடந்தார்.
திருவள்ளூரை அடுத்த மேல் நல்லாத்தூர் கிராமம் பட்டரை பகுதியில் தங்கம்மா என்பவரது நிலத்தில் நேற்று முன்தினம் 65 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பிணமாக கிடந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. இறந்த பெண் சிவப்பு நிற சேலையும், பச்சை நிற ஜாக்கெட்டும் அணிந்திருந்தார். இது குறித்து மேல்நல்லாத்தூர் கிராம நிர்வாக அலுவலர் விஸ்வநாதன் திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் செய்தார்.
போலீசார் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து இறந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரி மற்றும் மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.