விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம்

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் நடைப்பெற்றது.

Update: 2022-04-24 08:38 GMT
செங்கல்பட்டு,

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைத்தல், நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், விவசாயிகளுக்கு கடனுதவி வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை கலெக்டர் பெற்றுக்கொண்டார். அவற்றின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள துறைச்சார்ந்த அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இதில் கலெக்டர் தலைமையில் தேர்வுக்குழு அமைக்கப்பட்டு, விவசாயிகள் உழவன் செயலி மூலம் சிறந்த விவசாயிகளாக தேர்வு செய்யப்பட்ட தெய்வசிகாமணி என்பவருக்கு முதல் பரிசாக ரூ.15 ஆயிரமும், 2-ம் பரிசாக துரைராஜ் என்பவருக்கு ரூ.10 ஆயிரமும், 3-ம் பரிசாக கிருஸ்துராஜாவுக்கு ரூ.5 ஆயிரமும் வழங்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குனர் சுரேஷ், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் சாந்தா செலின்மேரி, வருவாய் கோட்டாட்சியர்கள் சரஸ்வதி, அறிவுடைநம்பி, வேளாண்மை அலுவலர்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்