மேச்சேரியில் விஷம் குடித்து பெண் தற்கொலை உதவி கலெக்டர் விசாரணை
மேச்சேரியில் விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொணடது தொடர்பாக உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
மேச்சேரி,
தர்மபுரி மாவட்டம் தொப்பையாறு மூலக்காடு பகுதியை சேர்ந்தவர் பாக்கியராஜ். மெக்கானிக். இவருக்கும், கிருஷ்ணகிரி மாவட்டம் நாட்ராம்பாளையத்தை சேர்ந்த வசந்தி (வயது 24) என்பவருக்கும் கடந்த 2015-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். பாக்கியராஜ் தனது குடும்பத்துடன் மேச்சேரி அருகே பொட்டனேரி நால்ரோடு பகுதியில் தங்கி வேலை பார்த்து வந்தார்.
இந்தநிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த வசந்தி சம்பவத்தன்று மேச்சேரிக்கு வந்தார். அங்கு ஒரு கடையில் விஷம் வாங்கி குடித்தார். பின்னர் நடந்து சென்ற அவர் மேச்சேரி குலாளர் தெருவில் மயங்கி விழுந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓமலூர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து மேச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் திருமணமாகி 7 ஆண்டுகளே ஆவதால் மேட்டூர் உதவி கலெக்டர் வீர் பிரதாப் சிங் விசாரணை நடத்தி வருகிறார்.