குலசேகரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டம்
குலசேகரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
குலசேகரம்,
குலசேகரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
போராட்டம்
தனியார் காடுகள் பாதுகாப்பு சட்டத்தில் இருந்து குமரி மாவட்டத்திற்கு விலக்கு அளிக்க வலியுறுத்தி குலசேகரம் அரசமூடு சந்திப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று தர்ணா போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஸ்டாலின் தாஸ் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் நூர்முகமது போராட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் விவசாயிகள் சங்க மாவட்ட துணை தலைவர் முருகேசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் லீமாரோஸ், சேகர், அண்ணாதுரை, கண்ணன், வட்டார செயலாளர்கள், மாவட்ட குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
போராட்டத்தின் போது தனியார் காடுகள் சட்டத்தில் வரையறை செய்யப்பட்டுள்ள ரப்பர் விவசாயிகள் உள்பட அனைத்து விவசாயிகளின் நிலங்களையும் அதிலிருந்து விடுவிக்க வேண்டும் என்பதும் வலியுறுத்தப்பட்டது.