பேட்டை:
சுத்தமல்லி இந்திரா காலனியை சேர்ந்தவர் முருகன். விவசாய கூலி தொழிலாளி. இவருக்கு கனகம்மாள் (வயது 30) என்ற மனைவியும,் 2 பெண் குழந்தைகள், ஆண் குழந்தை இருந்தனர். கணவர், மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த 17-ந் தேதி வயலுக்கு அடிக்கக்கூடிய களைக்கொல்லி மருந்தை கனகம்மாள் குடித்து விட்டார். இதனால் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை கனகம்மாள் இறந்தார். இதுகுறித்து சுத்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.