எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை

எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதா சிலைகளுக்கு அ.தி.மு.க. புதிய நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Update: 2022-04-23 20:09 GMT
கீழப்பழுவூர்:
அ.தி.மு.க. உட்கட்சி தேர்தலில் அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்திற்கு புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து அவர்கள் கீழப்பழுவூரில் உள்ள எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் பட்டாசுகள் வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்