பிளஸ்-2 மாணவியை பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோவில் கைது

பிளஸ்-2 மாணவியை பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-04-23 19:59 GMT
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, காரை கிராமத்தை சேர்ந்தவர் கருப்புசாமி. இவரது மகன் செல்வகுமார் (வயது 26). சம்பவத்தன்று இவர் 17 வயதுடைய பிளஸ்-2 மாணவி ஒருவரை கட்டாயப்படுத்தியும், மிரட்டியும் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதனை வெளியே தெரிவித்தால் கொலை செய்து விடுவதாகவும் மாணவியை மிரட்டியுள்ளார். இது பற்றி மாணவி தனது தாயிடம் கூறி அழுதுள்ளார். இதுகுறித்து மாணவியின் தாய் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா, போக்சோ சட்டம் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து செல்வகுமாரை கைது செய்தார். கைதான செல்வகுமாருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்புதான் திருமணம் நடந்துள்ளது, குழந்தை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்