உச்சினி மாகாளியம்மன் கோவிலில் பொங்கல் திருவிழா

அருப்புக்கோட்டை உச்சினி மாகாளியம்மன் கோவிலில் பொங்கல் திருவிழா நடைபெற்றது.

Update: 2022-04-23 19:42 GMT
அருப்புக்கோட்டை, 
அருப்புக்கோட்டை புளியம்பட்டி உச்சினி மாகாளியம்மன் கோவிலில் சித்திரைப்பொங்கல் திருவிழா நடைபெற்றது. 
விழாவையொட்டி  தீச்சட்டி எடுத்து வருதல், குத்துவிளக்கு பூஜை, மஞ்சள் நீராட்டு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவின் இறுதிநாளில் அம்மன் குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

மேலும் செய்திகள்