தவறி விழுந்த கட்டிட தொழிலாளி பலி
சிவகாசி அருகே தவறி விழுந்த கட்டிட தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
சிவகாசி,
சிவகாசி அருகே உள்ள ஈஞ்சார் வடக்கு தெருவை சேர்ந்தவர் குருவையா மகன் மணிகண்டன் (வயது40). கட்டிட தொழிலாளி. இந்த நிலையில் சம்பவத்தன்று இவர் கட்டச்சின்னம்பட்டியில் கட்டிட பணியில் ஈடுபட்டிருந்த போது எதிர்பாராதவிதமாக தவறி விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிவகாசியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இது குறித்து அவரது மனைவி சந்தனமாரி கொடுத்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.