10 பஸ்களில் காற்று ஒலிப்பான்கள் அகற்றம்

தஞ்சையில் பலவித சத்தத்துடன் அதிக ஒலி எழுப்பும் வகையில் பொருத்தப்பட்டிருந்த காற்று ஒலிப்பான்களை அகற்றி வட்டார போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

Update: 2022-04-23 19:16 GMT
தஞ்சாவூர்:-

தஞ்சையில் பலவித சத்தத்துடன் அதிக ஒலி எழுப்பும் வகையில் பொருத்தப்பட்டிருந்த காற்று ஒலிப்பான்களை அகற்றி வட்டார போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

அதிக சத்தம்

தஞ்சை மாநகருக்குள் இயக்கப்படும் 10 பஸ்களில் பலவித சத்தத்துடன் அதிக ஒலி எழுப்பும் வகையில் காற்று ஒலிப்பான்கள் பொருத்தப்பட்டு இருப்பதாக தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு புகார்கள் வந்தன. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க கலெக்டர் வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அதன்பேரில் தஞ்சை வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் ஆனந்த் மற்றும் அதிகாரிகள் தஞ்சை புதிய பஸ் நிலையம் பகுதியில் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

காற்று ஒலிப்பான்கள் அகற்றம்

அப்போது அந்த வழியாக வந்த மினிபஸ் மற்றும் தனியார் பஸ்களில் பலவித சத்தத்துடன் அதிக ஒலி எழுப்பும் வகையில் காற்று ஒலிப்பான்கள் பொருத்தப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த காற்று ஒலிப்பான்களை அதிகாரிகள் அகற்றினர். 10-க்கும் மேற்பட்ட பஸ்களில் இருந்து காற்று ஒலிப்பான்கள் அகற்றப்பட்டன.
மேலும் தஞ்சை மாநகருக்குள் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அதிக சத்தத்துடன் கூடிய காற்று ஒலிப்பான் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இதுபோன்று தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வட்டார போக்குவரத்து அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

மேலும் செய்திகள்