தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-04-23 19:14 GMT
சாலை தடுப்பு தேவை 
விருதுநகர்-சாத்தூர் நெடுஞ்சாலையில் தென்மாவட்டங்களுக்கு வரும் வாகனங்கள் அதிக அளவில் இயக்கப்படுகிறது. இந்நிலையில் சாலையில் வாகனங்கள் அதிவேகத்தில் இயக்கப்படுவதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த நெடுஞ்சாலையில் சாலைதடுப்பு ஏற்படுத்தி விபத்து நேராமல் தடுக்க வேண்டும்.
ராஜகனி, சாத்தூர்.
வீணாகும் குடிநீர்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகராட்சி 17-வது வார்டு பகுதியில் உள்ள குடிநீர் குழாய் உடைந்துள்ளது. இதனால் குடிநீரானது வீணாக சாலையில்  செல்கிறது. உடைந்த குழாயால் இப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. பொதுமக்கள் தண்ணீருக்காக அவ்வப்ேபாது சண்டையிடும் நிலையும் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பழுதடைந்துள்ள குடிநீர் குழாயை சரிசெய்ய வேண்டும்.
மணவாளன், அருப்புக்கோட்டை.
எரியாத தெருவிளக்குகள்
விருதுநகர் தாலுகா ஆவுடையாபுரம் அருகே சொக்கலிங்காபுரம் கிராமத்தில் உள்ள தெருவிளக்குகள் சரிவர எரிவதில்லை. இதனால் தினமும் இரவு நேரங்களில் சிறு, சிறு விபத்துகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. மேலும் இரவில் திருட்டு நடப்பதற்கான வாய்ப்பும் உள்ளது. அதிகாரிகள் இந்த பகுதியில் உள்ள எரியாத தெருவிளக்குகளை அப்புறப்படுத்தி புதிய விளக்குகள் பொருத்த வேண்டும்.         விநாயகமூர்த்தி, சொக்கலிங்காபுரம்.
ஆக்கிரமிப்பு
விருதுநகர் மாவட்டம் தாயில்பட்டி ஊராட்சி மண்குண்டாம்பட்டி-சிவகாசி மெயின்ரோட்டில் உள்ள கழிவுநீர் கால்வாய் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கால்வாயால் கழிவுநீர் தேங்கியுள்ளது. தேங்கிய கழிவுநீரில் இருந்து துர்நாற்றம் வீசி அப்பகுதி முழுவதும் சுகாதார சீர்கேடு அடைந்து உள்ளது. கழிவுநீரில் கொசுக்களும் அதிக அளவில் உற்பத்தி ஆவதால் அப்பகுதியில் கொசுத்தொல்லையால் மக்கள் சிரமப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கழிவுநீர் கால்வாயை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காசி, மண்குண்டாம்பட்டி.

மேலும் செய்திகள்