கொத்தங்குடியில் 2 நாட்களுக்கு பிறகு மின் வினியோகம்

கொத்தங்குடியில் 2 நாட்களுக்கு பிறகு மின் வினியோகம் செய்யப்பட்டதால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Update: 2022-04-23 19:06 GMT
மெலட்டூர்:-

கொத்தங்குடியில் 2 நாட்களுக்கு பிறகு மின் வினியோகம் செய்யப்பட்டதால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 

திடீர் மின் தடை

பாபநாசம் அருகே கொத்தங்குடியில் அக்ரஹாரம், மெயின்ரோடு உள்ளிட்ட இடங்களில் கடந்த 21-ந் ேததி இரவு திடீரென மின் தடை ஏற்பட்டது. இதை சரிசெய்ய வேண்டும் என கிராம மக்கள் ஊராட்சி மன்ற தலைவர் பழனி மூலமாக மெலட்டூர் மின்வாரிய உதவிபொறியாளருக்கு தகவல் தெரிவித்தனர். 
ஆனால் மின் வினியோகம் கிடைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் கடந்த 2 நாட்களாக கிராம மக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இந்்த நிலையில் நேற்று மாலை கொத்தங்குடி கிராமத்திற்கு மின் வாரிய ஊழியர்கள் வந்து மின்தடையை சரி செய்து மின்வினியோகம் கிடைக்க நடவடிக்கை எடுத்தனர். 

கிராம மக்கள் மகிழ்ச்சி

இதனால் 2 நாட்களுக்கு பிறகு மின் வினியோகம் செய்யப்பட்டதால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 
இதுகுறித்து கொத்தங்குடி ஊராட்சி மன்ற தலைவர் பழனி கூறியதாவது,
‘கொத்தங்குடி பகுதியில் கடந்த 21-ந் தேதி இரவு மின்தடை ஏற்பட்டது. இதுகுறித்து உரிய தகவல் தெரிவித்தும் உடனடியாக மின்தடை சரிசெய்யப்படவில்லை. 2 நாட்களுக்கு பிறகு நேற்று மின் வினியோகம் சீராகி உள்ளது’ என்றார்.

மேலும் செய்திகள்