கோவில் திருவிழாவில் போலீஸ்காரரை தாக்கிய 2 பேர் கைது
வத்திராயிருப்பு அருகே கோவில் திருவிழாவில் போலீஸ்காரரை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
வத்திராயிருப்பு,
வத்திராயிருப்பு அருகே கோவில் திருவிழாவில் போலீஸ்காரரை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவில் திருவிழா
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மகாராஜபுரத்தில் ஏரக்கம்மாள் கோவில் திருவிழா நடைபெற்றது. அப்போது குடிபோதையில் அப்பகுதியை சேர்ந்த திருப்பதி ராஜா (வயது26), அருண்குமார் (26) ஆகிய 2 பேரும் அந்த வழியாக வந்த வாகனங்களை செல்லவிடாமல் வழிமறித்து, போக்குவரத்திற்கு இடையூறாக தகராறு செய்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் வத்திராயிருப்பு போலீஸ்காரர் கண்ணன் (35) ஈடுபட்டு இருந்தார். அவர் திருப்பதி ராஜா, அருண்குமார் ஆகிய 2 பேரையும் போக்குவரத்துக்கு வழிவிட்டு ஓரமாக செல்லுமாறு கூறியுள்ளார்.
2 பேர் கைது
இந்நிலையில் திருப்பதி ராஜா, அருண்குமார் ஆகிய இருவரும் போலீஸ்காரர் கண்ணனை தகாத வார்த்தைகளால் பேசினர். பின்னர் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததுடன் தாக்கியதாக தெரியவருகிறது.
இதுகுறித்து போலீஸ்காரர் கண்ணன் கொடுத்த புகாரின் பேரில் வத்திராயிருப்பு போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.