அரசு பள்ளி மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா
ஜமால்புரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பட்டளிப்பு விழா நடந்தது.
அடுக்கம்பாறை
ஜமால்புரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பட்டளிப்பு விழா நடந்தது.
வேலூர் மாவட்டம் ஊசூரை அடுத்த ஜமால்புரத்தில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 45 மாணவர்கள் படிக்கின்றனர். பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த ஆசிரியர்கள் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர். இதில் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக பள்ளியில் படிக்கும் 5-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா நடந்தது.
தலைமை ஆசிரியை அமுதா தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் தேவிசுரேஷ், துணைத் தலைவர் மதியழகன், ஒன்றிய கவுன்சிலர் அம்மு பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் சக்திவேல் வரவேற்றார். மாவட்ட கல்வி அலுவலர் சம்பத், பள்ளி துணை ஆய்வாளர் மணிவாசகம், வட்டாரக் கல்வி அலுவலர் பிரபாகரன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனுசாமி பங்கேற்று மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். இதில் வார்டு உறுப்பினர் சுபாஷினிசதிஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.