சிங்கம்புணரியில் மாநில அளவில் பெண்கள் கபடி போட்டி
சிங்கம்புணரியில் மாநில அளவிலான பெண்களுக்கான கபடி போட்டி நடந்தது. இதை அமைச்சர்கள் கே.ஆர்.பெரியகருப்பன், சக்கரபாணி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
சிங்கம்புணரி
சிங்கம்புணரியில் மாநில அளவிலான பெண்களுக்கான கபடி போட்டி நடந்தது. இதை அமைச்சர்கள் கே.ஆர்.பெரியகருப்பன், சக்கரபாணி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
கபடி போட்டி
சிங்கம்புணரி ஒன்றிய நகர தி.மு.க. மற்றும் இளைஞரணி சார்பில் முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் 69-வது பிறந்த நாளை முன்னிட்டு மாநில அளவிலான பெண்களுக்கான மின்னொளி கபடி போட்டி நடைபெற்றது. சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் பின்புறம் இரும்பு தூண்கள் கொண்ட பிரமாண்டமான முறையில் களரி அமைத்து போட்டி நடைபெற்றது.
தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள், பெரு நகரங்களில் இருந்து 13 குழுக்கள் கலந்துகொண்டனர். முன்னதாக சிங்கம்புணரி அண்ணா மன்றம் அருகே விழா குழு தலைவர் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சரும் தி.மு.க. மாவட்ட கழக செயலாளர் கே.ஆர்.பெரியகருப்பன் கொடியசைத்து மாபெரும் பேரணியை தொடங்கி வைத்தார்.
அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்
கபடி போட்டி வீரர்கள் இளைஞரணி தொண்டர் அணியுடன் காரைக்குடி சாலை வழியாக வீரநடை போட்டு மைதானத்திற்கு வந்தனர். அங்கு அமைச்சர் பெரியகருப்பன் மற்றும் சிறப்பு அழைப்பாளராக கலந்து கண்ட உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் தலைமையில் போட்டிகள் தொடங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாநில இலக்கிய அணி தலைவர் தென்னவன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அருணகிரி, மற்றும் வடக்கு ஒன்றிய செயலாளர் பூமிநாதன், தெற்கு ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியன், அவைத்தலைவர் சிவக்குமார், செயற்குழு உறுப்பினர் கணேசன், சிங்கம்புணரி பேரூராட்சி மன்ற தலைவர் அம்பலமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கலந்து கொண்டவர்கள்
இதில் வடக்கு ஒன்றிய துணைச் செயலாளர் சிவபுரி சேகர், தெற்கு ஒன்றிய துணைச் செயலாளர் முத்துக்குமார், ஆர்.எம்.எஸ். மருத்துவர் அருள்மணி நாகராஜன், முன்னாள் சூரக்குடி ஊராட்சி மன்ற தலைவர் அனந்தகிருஷ்ணன் பொதுக்குழு உறுப்பினர் சோமசுந்தரம், கழக பிரதிநிதி குடோன் மணி, தருண் மெடிக்கல் புகழேந்தி, நகர பொருளாளர் கதிர்வேல், ஒன்றிய பொருளாளர் மணப்பட்டி பாஸ்கரன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மனோகரன், பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் இந்தியன் செந்தில், ஜமாத் தலைவர் ராஜாமுகமது, , விவசாய அணி காளாப்பூர் செல்வகுமார், பேரூராட்சி மன்ற கவுன்சிலர்கள் செந்தில் கிருஷ்ணன், ஜெயக்குமார், அலாவுதீன், தொழில் அதிபர் ரவிபாலா பிரகாஷ், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் கதிர்காமம், மேலப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயராணி சிவக்குமார்,மேலப்பட்டி தொழிலதிபர் சிவக்குமார், முறையூர் ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ், ஒன்றிய கவுன்சிலர் உதயசூரியன், சத்யன், பார்த்திபன், ஞானி செந்தில், ஆசிரியர் தனுஷ்கோடி, மதிசூடி யன், தொழில்நுட்ப பிரிவு சையது, அமுதன், மாணவரணி முரசொலி கார்த்திக், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.