கல்லூரி பஸ் மோதி வாலிபர் சாவு

கல்லூரி பஸ் மோதி வாலிபர் பலியானார்.

Update: 2022-04-23 18:21 GMT
திருவலம்

கல்லூரி பஸ் மோதி வாலிபர் பலியானார்.

வேலூர் மாவட்டம், மேல்பாடி அருகே உள்ள இ.பி நகரை சேர்ந்தவர் சார்லஸ் (வயது 23). இவர் நேற்று முன்தினம் திருவலத்தில் இருந்து மேல்பாடி நோக்கி மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தார். அப்போது மேல்பாடியில் இருந்து திருவலம் நோக்கி தனியார் கல்லூரி பஸ் வந்தது. வெப்பாலை அருகே வந்தபோது பஸ்சும், மோட்டார்சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் சார்லஸ் படுகாயம் அடைந்து, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்
இதுகுறித்து தகவலறிந்த மேல்பாடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி வாலாஜா அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்