பத்ரகாளி அம்மன் கோவிலில் பொங்கல் வழிபாடு

கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவிலில் பொங்கல் விழா நடந்தது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.

Update: 2022-04-23 18:20 GMT
கொல்லங்கோடு:
கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவிலில் பொங்கல் விழா நடந்தது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.
பொங்கல் விழா
கொல்லங்கோடு பத்ரகாளியம்மன் கோவிலில் பங்குனி தூக்க திருவிழாவை தொடர்ந்து மூலகோவிலில் சித்திரை 10-ம் நாள் பத்தாமுதைய பொங்கல் வழிபாடு நேற்று நடந்தது. 
விழாவில் காலையில் வழக்கமான பூஜை, 10.15 மணிக்கு கோவில் தந்திரி கொட்டாரகரை நீர்மனை ஈஸ்வரன் போற்றி பண்டார அடுப்பிற்க்கு தீ மூட்டினார். அதைதொடர்ந்து பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். 
கேரள பக்தர்கள்...
இந்த விழாவில் தூக்க நேர்ச்சையில் கலந்து கொண்ட குழந்தைகளின் பெற்றோர்கள் மற்றும் தமிழகம், கேரளாவை சேர்ந்த ஏராளமான பெண்கள் குடும்பத்தோடு இதில் கலந்து கொண்டு நேர்ச்சை நடத்தினர். நிகழ்ச்சியில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் சுற்றளவிற்க்கு பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். அதைதொடர்ந்து கோவிலில் சுத்திகலச பூஜை, லட்சார்ச்சனை ஆகியவை நடைபெற்றது.
விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு தேவையான குடிநீர், உணவு, மருத்துவம் போன்ற அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகம் சார்பில் செய்யபட்டிருந்தது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் தலைவர் ராமச்சந்திரன் நாயர், செயலாளர் மோகன்குமார், பொருளாளர் ஸ்ரீனிவாசன் தம்பி, துணை தலைவர் சதிகுமாரன் நாயர், துணை செயலாளர் விஜூகுமார் தலைமையில் கமிட்டி அங்கத்தினர்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்