நொய்யல்,
கரூர் மாவட்டம், செம்மடை 2-வது தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம். இவரது மனைவி இந்திரா தேவி (வயது 45). இவர் வீட்டில் இருந்த போது ஒரு அறைக்குள் கட்டுவிரியன் பாம்பு புகுந்துள்ளது. இதையடுத்து அக்கம், பக்கத்தினரை அழைத்து பாம்பை விரட்டியும் வெளியே செல்லவில்லை. இதுகுறித்த தகவலின் பேரில் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் திருமுருகன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு வந்து, வீட்டிற்குள் புகுந்த பாம்பை பிடித்து சென்று வனப்பகுதியில் விட்டனர்.