அரசு பஸ் மோதி பெயிண்டர் பலி

தக்கலை அருகே அரசு பஸ் மோதி நண்பர் கண் எதிரே பெயிண்டர் பரிதாபமாக பலியானார்.

Update: 2022-04-23 18:16 GMT
பத்மநாபபுரம்:
தக்கலை அருகே அரசு பஸ் மோதி நண்பர் கண் எதிரே பெயிண்டர் பரிதாபமாக பலியானார். 
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பெயிண்டர்
தக்கலை அருகே உள்ள குழிக்கோடு பறையன்விளை பகுதியை சேர்ந்தவர் தேவதாஸ். இவருக்கு 2 மகனும், ஒரு மகளும் உள்ளனர். இதில், இளைய மகன் யூஜின் ஜெபராஜ் (வயது29), பெயிண்டராக வேலை பார்த்து வந்தார். 
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு யூஜின்ஜெபராஜ் வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்க மோட்டார் சைக்கிளில் சென்றார். 
அரசு பஸ் மோதியது
பின்னர், பொருட்களை வாங்கி விட்டு அதே பகுதியை சேர்ந்த ரூபன் என்பவரை மோட்டார் சைக்கிளில் அழைத்து கொண்டு நாகர்கோவில்-திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் அழகியமண்டபம் நோக்கி சென்றார். முளகுமூடு ரேஷன் கடை அருகில் ரூபனை இறக்கி விட்டு விட்டு  யூஜின்ஜெபராஜ் மோட்டார் சைக்கிளில் சாலையை கடக்க முயன்றார். 
அப்போது, அவருக்கு பின்னால் வந்த அரசுபஸ் கண் இமைக்கும் நேரத்தில் யூஜின்ஜெபராஜின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் யூஜின்ஜெபராஜ் பஸ் சக்கரத்தில் சிக்கி நண்பரின் கண்எதிரே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
 இதுபற்றி தகவல் அறிந்த தக்கலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று யூஜின்ஜெபராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
வைரலான காட்சிகள்
பின்னர், இதுகுறித்து யூஜின்ஜெபராஜின் தந்தை தேவதாஸ் கொடுத்த புகாரின் பேரில் அரசுபஸ் டிரைவரான கீழ்குளம் அருகே தொழிக்கோடு பகுதியை சேர்ந்த நெல்சன் (48) என்பவர் மீது தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே விபத்து நடந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் யூஜின் ஜெபராஜ் விபத்தில் சிக்கி பலியான காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் செய்திகள்