ரவுடிகள் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
வேலூரில் 2 ரவுடிகள்குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
வேலூர்
வேலூரில் 2 ரவுடிகள்குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
வேலூர் சத்துவாச்சாரி காந்திநகரை சேர்ந்தவர்கள் அந்தோணி (வயது 25), ஜெயசூர்யா (22). இருவர் மீதும் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. ரவுடியாக வலம் வந்த இவர்களை சத்துவாச்சாரி போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைத்தார்.
இந்தநிலையில் இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும், என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன், மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியனுக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார்.