கொள்ளிடம் பகுதியில் குறுவை நெல் சாகுபடி குறைவு

கொள்ளிடம் பகுதியில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குறுவை நெல் சாகுபடி குறைந்து உள்ளது.

Update: 2022-04-23 18:04 GMT
கொள்ளிடம்;
கொள்ளிடம் பகுதியில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குறுவை நெல் சாகுபடி குறைந்து உள்ளது. 
குறுவை சாகுபடி
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் குறுவை நெல் சாகுபடியில் விவசாயிகள் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குறைவாக சாகுபடி செய்துள்ளனர். கொள்ளிடம் அருகே உள்ள ஆச்சாள்புரம், பழைய பாளையம், நல்லூர், பச்சை பெருமாநல்லூர், குன்னம், பெரம்பூர், மகாராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் குறுவைநெல் சாகுபடியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 
மாற்றுப்பயிர் சாகுபடி
கொள்ளிடம் ஒன்றியத்தில் கடந்த வருடம் குறுவைநெல் சாகுபடி சுமார் 5,000 ஏக்கரில் செய்தனர். ஆனால் இந்த ஆண்டு குறுவை சாகுபடியில் விவசாயிகள் அதிக நாட்டம் காட்டவில்லை. இந்த ஆண்டு சுமார் 2  ஆயிரம் ஏக்கரில் மட்டும் கொள்ளிடம் மற்றும் இதன் சுற்று வட்டார பகுதியில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. இதனால் கொள்ளிடம் வட்டார பகுதியில் விவசாயிகள் குறுவை சாகுபடியில் ஆர்வம் செலுத்த முடியாதநிலை ஏற்பட்டுள்ளது. தற்போது  விவசாயிகள் மாற்றுப் பயிர் சாகுபடியில்  தீவிரம் காட்டி வருகின்றனர்.

மேலும் செய்திகள்