திருக்கோவிலூர்,
அரகண்டநல்லூர் போலீசார் ஆதிச்சனூர் ரெயில்வே கேட் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அங்கு கஞ்சாவுடன் நின்று கொண்டிருந்த திருவண்ணாமலை மாவட்டம் விருதுவிலங்கினான் கிராமத்தை சேர்ந்த விஜயகுமார் மகன் அஜய் குமார் (வயது 20) என்பவரை போலீசார் கைது செய்து, விற்பனைக்காக அவர் வைத்திருந்த 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.