வாலிபருக்கு அரிவாள் வெட்டு; 2 பேர் கைது

பரமக்குடி அருகே வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-04-23 17:47 GMT
பரமக்குடி, 

பரமக்குடி அருகே உள்ள தோளூர் தெற்குப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 24).இவர் விளத்தூரில் உள்ள மதுபானக் கடையில் மது அருந்திவிட்டு சமத்துவபுரம் பெட்டிக்கடையில் சிகரெட் வாங்கி கொண்டிருந்தார். அப்போது தோளூர் சமத்துவபுரத்தை சேர்ந்த சிவகுரு நாதன் என்பவருக்கும் விக்னேசுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.அதோடு இருவரும் சென்று விட்டனர். அதன்பின்னர் விக்னேஷ் சம்பவ இடத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது கத்தியுடன் அங்கு வந்த  சிவகுருநாதன், விக்னேசை அவதூறாக திட்டி கத்தியால் நெற்றியில் வெட்டியுள்ளார். அவருடன் வந்த அதே பகுதியைச் சேர்ந்த பாண்டி அரிவாளால் பின்பக்க தலையில் வெட்டியுள்ளார். ராஜேஷ், சர்மா இருவரும் கம்பால் அடித்து தாக்கியுள்ளனர். இதுகுறித்து விக்னேஷ் கொடுத்த புகாரின் பேரில் பரமக்குடி தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துமாணிக்கம் வழக்குப்பதிவு செய்து சிவகுருநாதன், பாண்டி இருவரையும் கைது செய்துள்ளனர். ராஜேஷ், சர்மா இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்