படிக்கட்டில் தவறி விழுந்து பெண் சாவு

படிக்கட்டில் தவறி விழுந்து பெண் உயிரிழந்தார்.

Update: 2022-04-23 17:45 GMT
பேரையூர், 
பேரையூர் அருகே உள்ள எஸ்.கன்னாபட்டியை சேர்ந்த பழனிச்சாமி மனைவி பசுபதி (வயது 47). பசுபதி, தனது உறவினர் புதிதாக கட்டிக்கொண்டிருக்கும் வீட்டுக்கு கட்டிட வேலைக்காக சென்று உள்ளார். அப்போது மாடியில் இருந்து கீழே இறங்கும் போது, படிக்கட்டில் நிலை தடுமாறி கீழே விழுந்து விட்டார்.இதில் பசுபதிக்கு படுகாயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப ்பட்டார் .அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் உயிரிழந்தார். இதுகுறித்து பேரையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்