கார் மோதி தையல்காரர் பலி
ராமநாதபுரம் அருகே கார் மோதி தையல்காரர் பலியானார்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் அருகே உள்ள அச்சுந்தன்வயலை சேர்ந்தவர் நாகரெத்தினம். இவருடைய மகன் முருகானந்தம் (வயது44). தையல்காரராக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் கிழக்கு கடற்கரை சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார் மோதி படுகாயமடைந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் ராமநாதபுரம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே முருகானந்தம் இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதுதொடர்பாக அவரது மனைவி ராமப்ரியா அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குபதிவு செய்து ராமேசுவரத்தை சேர்ந்த கார் டிரைவர் ஜெயக்குமார் என்பவரை தேடிவருகின்றனர்.