அரசு இசைப்பள்ளிக்கு ரூ.1 கோடியில் புதிய கட்டிடம்
சீர்காழியில் அரசு இசைப்பள்ளிக்கு ரூ.1 கோடியில் புதிய கட்டிடம் கட்ட பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. பணியை தொடங்கி வைத்தார்.
சீர்காழி;
சீர்காழியில் மாவட்ட அரசு இசைப்பள்ளி வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இந்தநிலையில் தமிழக அரசு சார்பில் அரசு இசைப்பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்து அதற்கான தொடக்க விழா சீர்காழி ஸ்ரீ நகரில் நடைபெற்றது. பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். நகர்மன்ற துணைத்தலைவர் சுப்பராயன், பொதுப்பணித்துறை கட்டி பிரிவு உதவி செயற்பொறியாளர் நாகவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமையாசிரியர் முருகேசன் வரவேற்று பேசினார். விழாவில் சுமார் ரூ.1 கோடியில் கட்டப்பட உள்ள கட்டிடத்துக்கான பணியை பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ தொடங்கிவைத்து பேசினார்.
விழாவில் தி.மு.க நிர்வாகிகள் ராஜ்குமார், வேட்டங்குடி இளங்கோவன், மாவட்ட அரசு இசை பள்ளி ஆசிரியர்கள் சுப்பிரமணியன், பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.