பரங்கிப்பேட்டை அருகே பள்ளி மேலாண்மை குழு கூட்டம்

பரங்கிப்பேட்டை அருகே பள்ளி மேலாண்மை குழு கூட்டம்

Update: 2022-04-23 16:42 GMT

பரங்கிப்பேட்டை

பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கொத்தட்டை ஊராட்சி பஞ்சாங்கம் நடுநிலைப்பள்ளி வளாகத்தில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் தலைமை ஆசிரியர் வரலட்சுமி தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரிரங்கசாமி கலந்துகொண்டு பேசினார். அவருக்கு பள்ளியின் சார்பில் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

கூட்டத்தில் பள்ளி மேலாண்மை குழுவின் புதிய தலைவராக ஜீவாபாக்யராஜ் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து மற்ற நிர்வாகிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் ஊராட்சி மன்ற துணை தலைவர் விஜயராஜா, பேராசிரியர் ரங்கசாமி மற்றும் ஆசிரியர்கள், 40-க்கும் மேற்பட்ட பெற்றோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்