பாபநாசம் புனித செபஸ்தியார் ஆலயத்தில் உண்டியல் பணம், தங்கம்-வெள்ளி பொருட்கள் கொள்ளை

பாபநாசம் புனித செபஸ்தியார் ஆலயத்தில் உண்டியல் பணம், தங்கம்-வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2022-04-23 18:45 GMT
கொள்ளை நடந்த புனித செபஸ்தியர் ஆலயம்.
பாபநாசம்:-

பாபநாசம் புனித செபஸ்தியார் ஆலயத்தில் உண்டியல் பணம், தங்கம்-வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

தங்கம்-வெள்ளி பொருட்கள் கொள்ளை

தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் உள்ள புனித செபஸ்தியார் ஆலயத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவிழா நடந்தது. இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு ஆலய உண்டியலில் பணம், தங்கம், வெள்ளி பொருட்களை காணிக்கையாக செலுத்தினர். 
சம்பவத்தன்று இந்த ஆலயத்துக்கு வந்த மர்ம நபர்கள் ஆலயத்தின் உண்டியலை ஆலயத்தின் பின்புறம் உள்ள வாய்க்காலுக்கு தூக்கி சென்று உள்ளனர். பின்னர் அங்கு வைத்து உண்டியலை உடைத்து பணம், தங்கம், வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து விட்டு உண்டியலை வாய்க்காலில் வீசி சென்று விட்டனர். 

போலீசார் விசாரணை

இதுகுறித்து பாபநாசம் பங்குத்தந்தை கோஸ்மான் ஆரோக்கியராஜ் பாபநாசம் போலீசில் புகார் கொடுத்தார். 
அதன்பேரில் போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தி வருகிறார்கள். 
===

மேலும் செய்திகள்