ஊட்டியில் பல்கலைக்கழக துணை வேந்தர்களுக்கான கருத்தரங்கை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நாளை (திங்கட்கிழமை) தொடங்கி வைக்கிறார்.
ஊட்டியில் பல்கலைக்கழக துணை வேந்தர்களுக்கான கருத்தரங்கை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நாளை (திங்கட்கிழமை) தொடங்கி வைக்கிறார்.
கோவை
ஊட்டியில் பல்கலைக்கழக துணை வேந்தர்களுக்கான கருத்தரங்கை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நாளை (திங்கட்கிழமை) தொடங்கி வைக்கிறார்.
கவர்னர் ஆர்.என்.ரவி
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் தமிழக பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கும் 2 நாட்கள் கருத்தரங்கம் நாளை (திங்கட்கிழமை) மற்றும் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) ஆகிய 2 நாட்கள் நடைபெற உள்ளது.
இதை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தொடங்கி வைக்கிறார்.
இந்த கருத்தரங்கில் பங்கேற்பதற்காக கவர்னர் ஆர்.என்.ரவி சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று மதியம் 2.30 மணியளவில் கோவை விமான நிலையம் வந்தார்.
அவருடன் அவரது மனைவி லட்சுமிரவி வந்திருந்தார்.
பின்னர் அவர்கள் கோவை விமான நிலையத்தில் மதிய உணவு அருந்தினர்.
முன்னதாக கவர்னரை கலெக்டர் சமீரன், மாநக ராட்சி மேயர் கல்பனா, ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா, மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர், கோவை சரக டி.ஐ.ஜி. முத்துசாமி, மாநகர போலீஸ் கமிஷனர் பிரதீப்குமார் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்.
துணை வேந்தர்கள் கருத்தரங்கம்
அதைத்தொடர்ந்து கவர்னர் ஆர்.என்.ரவி தனது மனைவியுடன் கோவை விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக காரில் மேட்டுப்பாளையம் வழியாக நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு மாலை 5.20 மணி அளவில் வந்தடைந்தார்.
அவரை நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் வரவேற்றார்.
நாளை (திங்கட்கிழமை) காலை ஊட்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் 'புதிய உலக கட்டமைப்பில் இந்தியாவின் பங்கு மற்றும் 2047-ம் ஆண்டுக்குள் உலக நாடுகளை வழிநடத்தும் நாடாக இந்தியா இருக்க வேண்டும்' என்ற தலைப்பில் செயல்திட்டத்தை முன் வைக்கும் நோக்கத்துடன் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ள தமிழக பல்கலைக்கழக துணைவேந்தர்கள் கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசுகிறார்.
தொடர்ந்து அவர், நாளை மறுநாள் நடக்கும் கருத்தரங்கிலும் கலந்து கொள்கிறார்.
போலீஸ் பாதுகாப்பு
இந்த 2 நாள் கருத்தரங்கில் பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவர் ஜெகதீஷ் குமார், ஜோஹோ நிறுவன தலைமை செயல் அலுவலர் ஸ்ரீதர் வேம்பு ஆகியோர் பேசுகிறார்கள்.
இதில் தமிழ் நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள் பங்கேற்கிறார்கள்.
கவர்னர் வருகையையொட்டி கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. கோவை விமான நிலையத்தில் நேற்று கருப்பு சட்டை அணிய தடை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.