மரங்கள் வளர்ப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பொதுமக்களுக்கு போலீசார் விழிப்புணர்வு
மரங்கள் வளர்ப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பொதுமக்களுக்கு போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
பொள்ளாச்சி
உலக புவி தினத்தை முன்னிட்டு, பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் போலீஸ் நிலைய வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சதீஷ்குமார், பரமேஸ்வரன் மற்றும் போலீசார் பல்வேறு வகையான பழ மரக்கன்றுகளை நட்டனர். மேலும், மரங்கள் வளர்ப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பொதுமக்களுக்கு போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.