மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்களுக்கு காலமுறை ஊதியம்
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நன்னிலம்:
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஒன்றிய கூட்டம்
நன்னிலம் ஒன்றிய கிராம ஊராட்சியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள் சங்க ஒன்றிய கூட்டம் அச்சுதமங்கலத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் பழனிவேல் தலைமை தாங்கினார். ஒன்றிய துணைத்தலைவர் மகேந்திரன் முன்னிலை வகித்தார்.
இதில் மாநில இலக்கிய அணி செயலாளர் புரட்சிமணி, மாநில கூட்டமைப்பின் செயலாளர் பிரபாகரன், மாவட்ட செயலாளர் குமரவேல் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
காலமுறை ஊதியம்
கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:-
நன்னிலம் ஒன்றியம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்களுக்கு ஊதிய நிலுவைத்தொகை வழங்கக்கோரி அடுத்தமாதம்(மே) 15.5.2022 அன்று ஆர்ப்பாட்டம் நடத்துவது.
ஓய்வுபெற்ற மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும். மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் கிராம ஊராட்சி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள் கலந்து கொண்டனர்.