பருத்தி சாகுபடி பணியில் விவசாயிகள் மும்முரம்

கூத்தாநல்லூர் பகுதிகளில் பருத்தி சாகுபடி பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Update: 2022-04-23 14:16 GMT
கூத்தாநல்லூர்:
கூத்தாநல்லூர் பகுதிகளில் பருத்தி சாகுபடி பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். 
பருத்தி சாகுபடி பணி 
கூத்தாநல்லூர் பகுதிகளில் குறுவை மற்றும் சம்பா தாளடி சாகுபடி பணிகளுக்கு பிறகு மாற்று பயிராக பருத்தி சாகுபடி பணிகளில் அந்த பகுதி விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். கூத்தாநல்லூர், வடபாதிமங்கலம், பழையனூர், நாகங்குடி, சித்தனங்குடி, வெள்ளக்குடி, விழல்கோட்டகம், ஓகைப்பேரையூர், உச்சுவாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகளவில் விவசாயிகள் பருத்தி சாகுபடி பணிகளில் ஈடுபட்டு  வருகின்றனர்.
அதிகளவில் மகசூல் கிடைக்க வாய்ப்பு
இதுகுறித்து அந்த பகுதி விவசாயிகள் கூறுகையில்,
ஒவ்வொரு ஆண்டும் கோடை காலங்களில் முறையாக உழவு செய்து பின்னர் வயலில் பம்பு செட் மூலம் தண்ணீர் பாய்ச்சி வயல்களில் பாத்திகட்டி பருத்தி பயிர்கள் இடுகின்றோம். 
இது வளர்ச்சி அடைவதற்கு பம்பு செட் மற்றும் மழை தண்ணீரை பயன்படுத்தி போதிய பராமரிப்பு செய்து சாகுபடி பணிகளை மேற்கொண்டு வருகின்றோம். தற்போது பருத்தி பயிர்கள் நன்றாக வளர்ந்து பூக்கள் விட்ட நிலையில் உள்ளது.  கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகளவில் மகசூல் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது என்றனர். .
-

மேலும் செய்திகள்