அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன்

அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன்

Update: 2022-04-23 14:10 GMT
குன்னூர்

குன்னூர் மேல்கடைவீதியில் பிரசித்தி பெற்ற தந்தி மாரியம்மன் கோவில் உள்ளது. நூற்றாண்டு பழமை வாய்ந்த இந்த கோவிலின் தேர்த்திருவிழா ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் முதல் மே மாதம் வரை நடைபெறுவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக திருவிழா நடைபெறவில்லை. இந்த ஆண்டு 2 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 8ந் தேதி கொடியேற்றத்துடன் தேர்த்திருவிழா தொடங்கியது. ஒவ்வொரு நாளும் நடைபெறும் நிகழ்ச்சிகளை குன்னூரில் உள்ள பல்வேறு சமூகத்தினர் உபயமேற்று நடத்தி வருகின்றனர். 

இந்த நிலையில் இன்று குன்னூர் நகராட்சி சார்பில் புஷ்ப பல்லக்கு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நகராட்சி ஊழியர்கள் அலகு குத்தி ஊர்வலமாக வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். பின்னர் புஷ்ப பல்லக்கு ஊர்வலம் நடைபெற்றது. பல்லக்கில் ஊர்வலமாக வந்த அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது.

மேலும் செய்திகள்