காட்பாடி அறிஞர் அண்ணா கிளை நூலகத்தின் சார்பில் உலக புத்தக தின விழா
காட்பாடி அறிஞர் அண்ணா கிளை நூலகத்தின் சார்பில் உலக புத்தக தின விழா நடந்தது.
காட்பாடி
காட்பாடி காந்திநகர் அறிஞர் அண்ணா கிளை நூலகத்தின் சார்பில் உலக புத்தக தின விழா மற்றும் உறுப்பினர் சேர்க்கை, புரவலர் சேர்க்கை விழா நேற்று நடந்தது. விழாவுக்கு வாசகர் வட்ட தலைவர் வி.பழனி தலைமை தாங்கினார். தாமோதரன் முன்னிலை வகித்து பேசினார்.
துணைத் தலைவர் செ.நா. ஜனார்த்தனன் பங்ேகற்று ஓவியம், கட்டுரை, பேச்சு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு நூல்களை பரிசாக வழங்கி பேசினார்.
உலக புத்தக தின விழா குறித்து கவிஞர் ஆர்.சீனிவாசன், கல்வி உலகம் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் எஸ்.எஸ்.சிவவடிவு ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
விழாவில் துளிர் பள்ளி தலைமை ஆசிரியை த.கனகா, செஞ்சிலுவை சங்க துணைத்தலைவர் ஆர் விஜயகுமாரி, வாழ்நாள் உறுப்பினர் வி.காந்திலால்படேல், சீனிவாசன் ஆகியோர் நூலகத்தின் புரவலராக தங்களை இணைத்துக் கொண்டனர். நூலகர் தி.மஞ்சுளா நன்றி கூறினார்.