துறையூர், ஏப்.24-
துறையூரை அடுத்த அம்மாபட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 37), கூலி தொழிலாளி. இவரது மனைவி சரஸ்வதி. இந்த தம்பதிக்கு லித்திஸ் (3) என்ற மகனும், ஒரு கைக்குழந்தையும் உள்ளனர். இன்று காலையில் சுரேஷ் தனது மகன் லித்திசை அழைத்துக்கொண்டு சைக்கிளில் காளிப்பட்டி கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, சேலம் மாவட்டம் பொட்டியாபுரம் கிராமத்தில் இருந்து அம்மாபட்டி கிராமத்திற்கு செங்கல் ஏற்றி வந்த லாரி சுரேஷ் ஓட்டி வந்த சைக்கிள் மீது மோதியது. இதில் தந்தையும், மகனும் கீழே விழுந்தனர். லித்திஷ் லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான். சுரேஷின் கையில் பலத்த காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த துறையூர் போலீசார் லித்திஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சுரேசை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இது குறித்த புகாரின் பேரில் துறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.