வாலிபர் கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-04-11 18:11 GMT
ராமநாதபுரம், 
ராமநாதபுரம் மகாசக்திநகர் 5-வது தெருவை சேர்ந்த அமீர் என்பவரின் மகன் அகமது கபீர் (வயது25). இவர் 14 வயது சிறுமியின் வீட்டிற்குள் நள்ளிரவில் தாழ்ப்பாளை விலக்கி உள்ளே புகுந்துள்ளார். அங்கு தந்தையின் அருகில் படுத்து தூங்கி கொண்டிருந்த சிறுமிக்கு அகமது கபீர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சத்தம் கேட்டு சிறுமியின் தந்தை விழித்தபோது அகமது கபீர் ஓடி விட்டாராம். இதுகுறித்து சிறுமியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து அகமதுகபீரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்