ஆலாம்பாளையம் பேரூராட்சி கூட்டம் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு
ஆலாம்பாளையம் பேரூராட்சி கூட்டம் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு
பள்ளிபாளையம்:
பள்ளிபாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட ஆலாம்பாளையம் பேரூராட்சி கூட்டம் நேற்று காலை மன்ற அரங்கில் நடந்தது. கூட்டத்திற்கு செயல் அலுவலர் கிருஷ்ணவேணி தலைமை தாங்கினார். பேரூராட்சி தலைவர் சகுந்தலா கூட்டத்தை தொடங்கி வைத்தார். கூட்டத்தில் சொத்து வரி, காலிமனை வரி குறித்து விவாதம் நடந்தது. பின்னர் சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் பாலு, கவிதா வாசு, தனசேகர், புஷ்பராஜா, பேகம் ஜாகீர் ஆகிய 5 பேர் கருப்பு பேட்ஜ் அணிந்து வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து பேரூராட்சியில் சொத்து வரி உயர்வு குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.